தமிழ் வளர் மையம்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
மற்றும்
எட்யுரைட் அறக்கட்டளை, அமெரிக்கா
வழங்கும்

தமிழ் கற்பித்தல் – பட்டயப்படிப்பு – ஓராண்டு
Diploma in Tamil Teaching – One year
Registration Amount: USD $500

Register Here

பாடத்திட்டம்

வரிசை எண் பாடம் நோக்கம்
TAMT-101 தமிழ் கற்பித்தல் – அடிப்படை நிலை
கற்றலில் அடிப்படைத்திறன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கேட்டல்,
படித்தல் ஆகிய இரு திறன்களும், செய்திகளை உட்கொள்ளும் திறன்கள் ஆகும்.
பேசுதல், எழுதுதல் ஆகிய இருதிறன்களும் செய்திகளை வெளியிடும் திறன்கள் ஆகும்.
கற்கும் மாணவர்கள், எந்த அளவுக்குச் செய்திகளை வெளியிடுவர் என்பதையும்,
ஒவ்வொரு திறன் குறித்தும், அத்திறனை வெளிப்படுத்தும் முறை, அதன் பயன்,
அத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சிகள் குறித்தும் சுருக்கமாக இத்தாளில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TAMT-201 படைப்புக்கலை தமிழின் நவீன இலக்கியங்களான சிறுகதை, கவிதை, நாடகம், உரைநடை
மற்றும் வருணனை நிகழ்த்துதல் போன்றவற்றில் புலமை பெறச்செய்தல்.
TAMT-301 அடிப்படைத்தமிழ் இலக்கணம் மொழியைப் பிழை இல்லாமல் பேசுதல், பிழை இல்லாமல் எழுதுதல் ஆகிய
இரண்டும் மொழியை கற்பதன் நோக்கங்கள். அந்நோக்கங்களை அடைய இலக்கணம்
பெரிதும் பயன்படுகிறது. இத்தாளில் 1. எழுத்து 2. சொல் 3.பொருள் 4.யாப்பு 5. அணி
என்று தமிழ் இலக்கணவகை ஐந்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இத்தாள்
அமைக்கப்பட்டுள்ளது.
TAMT-LAB-401 அயலக நாடுகளில் தமிழ்க்கல்வி
(செய்முறைத்தாள்)
  • புலம் பெயர் நாடுகளில் தமிழ்மொழிப் பரவல்
  • தமிழ்க் கல்வி முறைகளுடன் இணைந்த தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்
  • புலம்பெயர் தேசங்களில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அவற்றின் தோற்றமும் வரலாறும்
  • தமிழ்க் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்
  • தமிழ்க்கல்வியை ஊக்கப்படுத்துவதற்கான நிறுவனங்கள்
  • பெற்றோர் மூலமான தமிழ்க்கல்வி ஊட்டலும் அதற்கான வாய்ப்புகளும்
  • தமிழ்க்கல்விக்கு புலம்பெயர் நாடுகளில் அரசுகள் அளிக்கும் ஊக்கமும் உதவிகளும்

முன்பதிவிற்குப் பின் பாடத்திட்டம் பகிரப்படும். பயிற்சி தொகை USD 500 finance@eduright.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Zelle (United States) அல்லது PayPal (Canada) செய்துவையுங்கள். பல்ககலைக்கழகத்திற்கு தங்களது கட்டணம் அனுப்பி வைக்கப்பட்டபின் உங்களது பதிவு எண் மற்றும் பயிற்சி விபரங்கள் தெரிவிக்கப்படும். பயிலரங்கத்தில் பங்கேற்க Microsoft Teams செயலியை தங்கள் கணினி மற்றும் திறன்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளவும். https://www.microsoft.com/en-us/microsoft-365/microsoft-teams/download-app பயிலரங்கத்திற்கான இணையவழி இணைப்பு அனுப்பப்படும்.